Breaking News

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு.!

உள்நாட்டுச் செய்திகள் 

 • பெண் அரச உத்தியோகத்தர்கள் சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணி ந்து அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என வௌியிடப்பட் டுள்ள சுற்று நிரூபத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்து பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

 • அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அஸ் கிரிய பீட மகாநாயக்கர் வரக்கா கொட ஶ்ரீ ஞானரத்தன தேரரை சந் தித்துள்ளனர். 

 • அக்கரைப்பற்று – பதூர் பள்ளி வீதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 


 • ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக் கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் அசாத் சாலி வாக்கு மூலம் அளித்துள்ளார். 


 • ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழி ற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையி லான சந்திப்பு நடைபெற்றுள்ளது. 


 • நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளி ரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. 


 • ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கான 17 புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 • அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 


 • ஜனாதிபதி செயலணியின் முன் னாள் தலைமை அதிகாரி கலாநிதி குசும்தாச மஹனாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன் னாள் தலைவர் பியதாச திசா நாயக்க ஆகியோருக்கு எதிரான விசாரணைகள் நிறைவு செய் யப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறி வித்துள்ளது.
வௌிநாட்டுச் செய்திகள் 


 • மலேசிய விமான நிலையத்தில் வைத்து 2017 ஆம் ஆண்டு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் விஷம் தடவி கொலை செய்யப்பட்ட வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங் நாம் (Kim Jong Nam), அமெரிக்க உளவுப்பிரிவின் உள வாளி என வோல் ஸ்ட்ரீட் பத்திரிகை (Wall Street Journal) செய்தி வௌியிட்டுள்ளது. 


 • மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க வுள்ளதாக, கனடா அறிவித்துள்ளது. 


 விளையாட்டுச் செய்திகள் 


 • உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை மற்றும் பங்களா தேஷ் அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டி மழை காரணமாக கைவிடப் பட்டுள்ளது. 


 • முன்னிலையில் நீடிக்கின்ற அணிகளுக்கு எதிராக சவால் விடுப் பதற்குத் தம்மால் முடியும் என, ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா தெரிவித்துள்ளார்.