Breaking News

முப்பது வருடம் போராடிய தமிழினத்துக்கு போராட்டம் என்பது புதிது அல்ல.!

முப்­பது வரு­ட­காலம் போரா­டிய தமிழ் இனத்­துக்கு போராட்டம் என்­பது புதி­தான விட­ய­மல்ல என்­பதை இவ்­வி­டத்தில் நான் கூறி­வைக்க விரும்­பு­கின் றேன். கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அனை­வரும் இந்த போராட்­டத்தில் ஒன்­றி­ணைய வேண்­டி­யது அவ­சியம் என்று மட்­டக்­க­ளப்­பு­ மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வியாழேந்­திரன் தெரி­வித்துள்ளாா். 

கல்­முனை வடக்கு உபபிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்தக் கோரி பிர­தேச செய­லகம் முன்­பாக சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்டம் நடை­பெற்று வரு­கின்­றது.

அதன் மூன்றாம் நாளா­கிய கடந்த புதன்­கி­ழமை உண்ணாவிரதத்தில் ஈடு­பட்­டுள்­ள­வர்­களைப் பார்­வை­யிட்­ட­பின் னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

மேலும் தெரி­விக்­கையில்

 1993.07.28 ஆம் திகதி அன்று நாட­ளா­விய ரீதியில் அமை­யப்­பெற்ற 29 உப பிர­தேச செய­ல­கங்­களில் 28 பிர­தேச செய­ல­கங்கள் தர­மு­யர்த்­தப்­பட்­டி­ருக்க ஏன் கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம் மாத்­திரம் தர­மு­யர்த்­தப்­ப­டாமல் இருக்­கின்­றது என்ற கேள்வி எங்­க­ளுக்குள் எழு­கின்­றது.

கடந்த மூன்று தசாப்தம் தாண்­டிய காலத்தில் எந்த அர­சாங்கம் வந்­தாலும் அந்த அர­சாங்­கத்­தோடு இணைந்து கொண்டு கிழக்கு மாகா­ணத்தில் தமி­ழர்­களின் இருப்பை கேள்­விக்­குள்­ளாக்­கு­கின்ற விதத்­திலே இந்த மாகா­ணத்தை தங்­களின் மாகா­ண­மாக மாற்ற முற்­ப­டு­கின்ற செயற்­றிட்டம் இந்த மண்­ணிலே சகோ­தர இன அர­சி­யல்­வா­தி­களால் அரங்­கேறி உள்ளது. .

இதனைக் கடந்த காலத்தில் இருந்­த­வர்கள் வாய்­பொத்தி கைகட்டி பார்த்து கொண்டு இருந்­தி­ருக்­கலாம். நாம் அவ்­வாறு இருப்­ப­தற்கு தயா­ரில்­லை­யென கூறிக்கொள்ள விரும்­பு­கின்றேன். கிழக்கு மாகா­ணத்­திலே 58.9 வீத­மாக இருந்த தமி­ழர்கள் 38.7 வீதத்­துக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

நல்­லி­ணக்க அர­சி­யலில் கிழக்கு தமி­ழ­ரு­டைய இருப்பை கேள்­விக்­குள்­ளாக்­கு­கின்ற நிலமை கிழக்கு மாகா­ணத்­திலே நாளுக்கு நாள் நடை­பெற்றுக் கொண் டிருக்­கின்­றது. அம்­பாறை மாவட்­டத்­தில் இருக்­கின்ற ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களின் நில­வ­ளத்தை சூறை­யாடி இருப்பை கேள்­விக்­குள்­ளாக்­கு­கின்ற செயற்­றிட்­டங்­களில் ஒன்றாகவே இவ்விடயத்தை பார்க்கின்றேன்.

1996 ஆம் ஆண்டில் இருந்து மூன்று தசாப்த கால­மாக இந்த பிர­தேச செய­லகம் தர­மு­யர்த்தப்படாமல் இருப்­ப­தற்கு அதுவே காரணமாகும். 16 கிராம சேவகர் பிரி­வு­களைக் கொண்டு அமைச்சர் ஒருவர் ஓட்­ட­மா­வ­டி­யில் இரண்டு பிர­தேச செய­ல­கங்­களை அமைத்­துள்ளார்.

ஏறாவூர் நக­ரில் 15 கிராம சேவகர் பிரி­வுக்கு ஒரு பிர­தேச செய­லகம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கை­யில் எங்­கு­மில்­லா­த­படி காத்­தான்­குடி ஓட்­ட­மா­வ­டி­யையும் இணைத்து நிலத்­தொ­டர்­பற்ற தனி கல்வி வலயம் அமைக்கப்பட்டுள் ளது. அது­மாத்­தி­ர­மின்றி முன்னாள் ஆளுநர் காத்­தான்­கு­டியில் 22 பாட­சா­லை­களைக் கொண்டு தனி­யான கல்வி வலயம் அமைப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுத்­துள்ளார்.

இவ்­வாறு தங்­க­ளுக்கு ஏற்ற விதத்­தில் அர­சாங்­கங்­களை பயன்­ப­டுத்தி தமிழ் மக்­களைப் புறந்­தள்­ளு­கின்ற இவ்­வா­றான செயற்பாடுகளை நாங்கள் இனி மேலும் பார்த்துக்கொண்டு பொறுமையாக இருக்கமுடியாது. இதற்கு இனி யொருபோதும் இந்த கிழக்கு மண்ணிலே இடமளிக்க மாட்டோம்.

முப்பது வருடகாலம் போராடிய தமிழ் இனத்திற்கு போராட்டம் என்பது புதி தான விடயமல்ல என்பதனையும் இவ்விடத்தில் நான் கூறிவைக்க விரும்பு வதாகத் தெரிவித்துள்ளாா்.