புலமைப்பரிசில், சாதாரண தரப் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியிலான தரப்படுத்தல்கள் வௌியாகாது - கல்வி அமைச்சர்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியதன் பின்னர், நாடளாவிய ரீதியிலான தரப்படுத்தல்கள் (Island’s Best Rankings) வௌியிடப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளாா்.
அதற்கமைய, எதிர்வரும் காலங்க ளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதர சாதா ரண தரப் பரீட்சைகளில் மாணவர்கள் சித்தியடைந்துள்ளனரா, இல்லையா என்பது குறித்து மாத்திரம் பெறுபேறு களில் குறிப்பிட எதிர்பார்க்கப்பட்டுள் ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட் டார்.
போட்டித்தன்மையற்ற தடை தாண்டல் பரீட்சையாக இவற்றை நடத்த திட்டமிடுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
குருணாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே கல்வி அமைச்சர் இவ் விடயத்தை தெரிவித்துள்ளாா்.