Breaking News

தீர்வை வழங்கும் திட்டம் ஜனா­தி­ப­தி­யிடம் இல்லை - மாவை

ஜனா­தி­ப­தியும்,பிர­த­மரும் ஓர­ணி­யாக இணைந்து தமிழர் தரப்பின் பிரச்சினை­க­ளுக்கு முதலில் தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலை­வரும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்துள்ளாா். 

ஜனா­தி­பதி, - பிர­தமர் ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான முரண்­பா­டுகள் கார­ண­மாக தமிழ் மக்­களே அதி­க­மாக பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். தமிழ் மக்­க ளின் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வாய்ப்­புகள் அனைத்­துமே தட்­டிப்­ப­றிக்­கப்­ப­டு­கின்­றன.

அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்­கை­யில்லா கார­ணத்­தி­னா­லேயே தொடர்ந்தும் நாம் சர்­வ­தேச தரப்பை நம்­பி­யி­ருக்க வேண்­டி­யுள்­ளது. தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு குறித்து நாம் தொடர்ச்­சி­யாக அரச தரப்புக்கும் சர்­வ­தேச தரப்­புக்கும் அழுத்தம் கொடுத்து வரு­கின்றோம். எமக்கு கிடைத்த சகல வாய்ப்­பு­க­ளையும் எமது மக்­க­ளுக்கு சார்­பாக பயன்படுத்­திக்­கொள்­ளவே நாம் முயற்­சித்து வரு­கின்றோம்.

அண்­மையில் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட வேளையில் நாம் அவ­ருடன் சந்­திப்பை மேற்­கொண்டு எமது மக்க ளின் நீண்­ட­கால பிரச்­சி­னைக்­க­ளுக்கு நிரந்­த­ர­மான தீர்­வுகள் வேண்டும் என்­ப­தையே வலி­யு­றுத்­தினோம். சர்­வ­தேச தலை­யீ­டுகள் மற்றும் ஒத்­து­ழைப்­புகள் இல்­லாது எம்மால் தீர்வை நோக்கி பய­ணிக்க முடி­யாது.

ஆகவே தான் நாம் தொடர்ந்தும் சர்­வ­தேச தரப்பை நம்பி செயற்­பட்டு வரு­கின் றோம். இந்த ஆட்­சியை உரு­வாக்­கி­ய­போது ஜனா­தி­பதி - பிர­தமர் இருவர் மீதும் அதிக நம்­பிக்கை வைத்­தது தமிழர் தரப்­பே­யாகும்.

புதிய அர­சியல் அமைப்பு ஒன்­றினை உரு­வாக்கி அதன் மூல­மாக தமிழ் மக்­களின் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ள முடியும் என்ற எண்ணம் இருந்­தது. அதற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­க­வும்­பட்­டன.

இனப்­பி­ரச்­சி­னை­கான தீர்­வுகள் எட்­டப்­படும் வாய்ப்­புகள் உரு­வாகி வந்த நேரத் தில் இடை நடுவே ஜனா­தி­பதி மேற்­கொண்ட சில தவ­றான செயற்­பா­டுகள் கார­ண­மாக தமிழ் மக்­களின் தீர்வு குறித்த முயற்­சிகள் குழப்­பப்­பட்­டன. ஜனா­தி­ப­திக்கோ அல்­லது அவ­ருடன் இன்று இணைந்­துள்ள சக்­தி­க­ளுக்கோ தமிழர் விட ­யத்தில் தீர்­வு­களை பெற்­று­கொ­டுக்கும் நோக்கம் இல்லை.

அவர்­க­ளுக்கு இந்த நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தி சிறு­பான்மை மக்­களின் உரி­மை­களை பெற்­றுக்­கொள்ளும் முயற்­சி­களை தடுக்க வேண்டும் என்ற நோக்­கமே உள்­ள­தாக அவர்­களின் செயற்­பா­டுகள் மூலம் தெரி­கின்­றன. எனி னும் தொடர்ந்தும் இவ்­வாறு அநா­வ­சி­ய­மாக பிரச்­சி­னை­களை தூண்­டி­விட்டு அதன் மூலம் தமி­ழர்­களின் தீர்­வு­களை குழப்­பக்­கூ­டாது.

இன்று முஸ்லிம் அமைச்­சர்கள் குறித்த விடயம் குறித்து பிர­தான கட்­சிகள் அக்­கறை செலுத்­தி­வ­ரு­கின்­றன. முஸ்லிம் அமைச்­சர்கள் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அவர்கள் குற்­ற­மற்­ற­வர்கள் என்­பதை அவர்­களே நிரு­பிக்க வேண்டும். இந்த விட­யங்­களில் சர்­வ­தேச சக்­தி­களின் தலை­யீ­டுகள் உரு­வாகி இன்று பிரச்­சினை வேறு திசைக்கு கொண்­டு­செல்­லப்­ப­டு­கின்­றன. தமிழர் விவ­கா­ரங்­களில் முதலில் தீர்வை பெற்­றுக்­கொள்ள வேண்டும்.

இன்று நாட்டில் ஏற்­பட்­டுள்ள அர­சியல் குழப்­பங்­களை கார­ண­மாக வைத்­து­கொண்டு ஜனா­தி­பதி தேர்­தலை நடத்த வேண்டும் என்ற கருத்­துக்கள் உள்­ளன. அதற்­கான வாய்ப்­பு­களும் உள்­ளன. ஆனால் தேர்­தலை நடத்த முன்னர் முத லில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க வும் ஒரு அணி­யாக ஒன்­றி­ணைந்து முதலில் பிர­தான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண வேண்டும்.

கொடுத்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அமைய முதலில் புதிய அரசியலமைப்பினை உருவாக்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இதனை செய்து முடித்தால் இன்று நாட்டில் இடம்பெற்று வருகின்ற சகல பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்.

ஆகவே அடிப்படை குழப்பம் எங்கு உள்ளது என்பதை ஜனாதிபதியும் பிரதம ரும் முதலில் தெரிந்துகொண்டு தீர்வுகளை நோக்கி பயணிக்க வேண்டும் என தமிழர் தரப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்­கால அர­சியல் நகர்­வுகள் குறித்து கருத்து தெரி­விக்கும் போதே இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலை­வரும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்துள்ளாா்.