Breaking News

அமெரிக்காவின் நெருக்குதலிற்கு எதிராக கொழும்பிலுள்ள சீனத்தூதுவர் எச்சரிக்கை.!

வர்த்தகப் போரொன்றை சீனா விரும்பவில்லை. ஆனால் தேவையேற்படுமா னால் அத்தகையதொரு போருக்கு சீனா அஞ்சவுமில்லை. அதை நடத்தத் தயாராக இருக்கிறது என்று கொழும்பிலுள்ள சீனாத்தூதுவர் செங் சூவேயு வான் எச்சரிக்கை விடுத்துள்ளாா். 

கொழும்பு சீனத்தூதரகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன் றில் சீனத் தூதுவர் அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட சில அரசியல்வாதி களால் முன்னெடுக்கப்பட்டுள்ள வர்த் தகப் போரில் சீனா அதன் சட்டபூர்வ மானதும், நியாய பூர்வமானதுமான உரிமைகளையும், நலன்களையும் விட்டுக்கொடுக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார்.

'ஜனாதிபதி சி ஜின்பிங் உறுதியாகக் கூறியிருப்பதைப் போன்று சீனாவும், அமெரிக்காவும் வர்த்தகத்தையும், பொருளாதாரப் பிரச்சினைகளையும் சமத்து வமானதொரு அடிப்படையிலேயே கையாள வேண்டும் என்பதுடன் பரஸ்பரம் நியாயபூர்வமான அக்கறைகளின் மீது கூடுதல் கவனத்தைச் செலுத்தவும் வேண்டும்.

இருதரப்பும் வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளிலுள்ள வேறு பாடுகளை இல்லாமற்செய்ய முடியும் என்று சீனா உயர்ந்த பொறுப்புணர்வுட னும், அக்கறையுடனும் நம்புகின்றது.

ஆனால் அடிப்படை நலன்களை சீனா வர்த்தகம் செய்யும் என்றோ அல்லது அதன் சுயாதிபத்தியம், பாதுகாப்பு, அபிவிருத்திக்கு ஊறுவிளைவிக்கப்படு வதை அனுமதிக்கும் என்றோ வெளிநாடுகள் மாயையை வளர்த்துக்கொள்ளக் கூடாது என்று தூதுவர் தெரிவித்துள்ளார்.