எகிப்திய முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி காலமாகி விட்டாா்.!
எகிப்து இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட அந்நாட்டின் முன்னாள் ஜனா திபதி மொஹமட் முர்ஸி (Mohammed Morsi) தனது 67ஆவது வயதில் நேற்று காலமானார்.
எகிப்தின் மாமனிதராக வர்ணிக்கப்ப டும் மொஹமட் முர்ஸி தம்மீது சுமத் தப்பட்டிருந்த குற்றச்சாட்டு தொடர் பான விசாரணை நீதிமன்றில் இடம் பெற்றுக்கொண்டிருந்தபோது மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மார டைப்பே மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்தின் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஹூஸ்னி முபாரக்கின் பதவி நீக்கத்தின் பின் ஜனநாயக ரீதியில் எகிப்தின் ஜனாதிபதியாக முதன் முதலில் தெரிவுசெய்யப்பட்டிருந்த மொஹமட் முர்ஸி 2013ஆம் ஆண்டு பதவி கவிழ்க் கப்பட்டிருந்தார்.
நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதால் அவர் சிறையிலடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், இது ஒரு திட்டமிட்ட சதி என லெபனானின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் எகிப்திய ஜனாதிபதியின் மறைவையொட்டி உலகத் தலைவர்கள் பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அவரின் மறைவை பேரிழப்பாக கருதுவதாக துருக்கிய ஜனாதிபதி ரிசப் தயீப் எர்டோ கன் தெரிவித்துள்ளார்.