செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்
உள்நாட்டுச் செய்திகள்
- பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபி விருத்தி அமைச்சினால் 65,000 மில் லியன் ரூபாவிற்கான குறை நிரப்பு பிரேரணையொன்று பாராளு மன்றத் தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
- யாழ். கொக்குவில் பகுதியிலுள்ள வீடுகள் சிலவற்றின் மீது இனந்தெரி யாத சிலர் தாக்குதல் மேற்கொண்டு ள்ளனர்.
- தோட்டத்தொழிலாளர்களுக்கு மேலதிகக் கொடுப்பனவு வழங்கப்படா மைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்துகொண்டனர்.
- மக்கள் சக்தி செயற்றிட்டத்தின் மூலம் கந்தப்பளை எஸ்கடெல் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டன.
- சேருநுவர பகுதியில் 4 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத் திய சிறிய தந்தைக்கு 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
- தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசகர் குழுவை ஸ்தாபிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
- கைது செய்யப்பட்ட ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக் கப்பட்டுள்ளார்.
- மொஹமட் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய மௌ லவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
- லிட்ரோ கேஸ் நிறுவனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
வௌிநாட்டுச் செய்திகள்
- இந்தோனேசியா 210 தொன் நிறையுடைய குப்பைகளை அவுஸ்திரேலியா விற்கு மீள அனுப்பவுள்ளது.
- தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள் ளார்.
- தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க இரா ஜாங்கத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
விளையாட்டுச் செய்தி
- உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணி கள் மோதும் முதலாவது அரையிறுதிப் போட்டி மழை காரணமாக தடைப்பட்டுள்ளது.