புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு.!
உள்நாட்டுச் செய்திகள்
- தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத் தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக, தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
- வட மாகாணத்தில் தெரிவுசெய் யப்பட்ட 77 அரச ஊழியர்களு க்கு நிரந்தர நியமனம் வழங்கப் பட்டுள்ளது.
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சமூக வலைத்தளம் ஊடாக மக்களின் கேள்விகளுக்கு பதில ளித்துள்ளார்.
- தமிழ் அரசியல் கைதி ஒருவர் தனக்கு பிணை வழங்குமாறு கோரி புதிய மெகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
- தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கல் செய்த முன் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
- மகா சங்கத்தினரை அவமதிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டுச் செய்திகள்
- தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை லண்டன் மருத்துவர்கள் வெற்றி கரமாகப் பிரித்துள்ளனர்.
- பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜன்ட்ரோ டொலிடோ (Alejandro Toledo) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பெரு நாட்டு அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
- ஜேர்மனியின் உர்சுலா வொன்டர் லியென் (Ursula Vonder Leyen) ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள் ளார்.
- உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத்தில் தரவரிசைக்காக பிஜியுடன் நடை பெற்ற போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.