Breaking News

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு

உள்நாட்டுச் செய்திகள் 
  • கழிவுகள் அடங்கிய கொள்கலன் களை கொண்டுவந்தவர்கள் தொடர் பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
  • ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலு டன் தொடர்புடைய தகவல்களை வழங்கியவருக்கு சன்மானம் வழங்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 
  • அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டப் படிப்பை பூர்த்திசெய்த அல்லது இலங்கை மருத்துவ சபை ஊடாக நடத் தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு இலங்கையில் மருத்துவ தொழிலில் ஈடுபடுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளு மாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
  • கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையில் தற்காலிகமாகக் கடமை யாற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத் திருந்தனர். 
  • தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் 9 நாட்களாக புதிய மெகசின் சிறைச்சாலைக்குள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
  • 2019ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் தனியார் பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தி யோகபூர்வ இணையத்தளத்தினூடாக அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
  • தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட சுகயீன விடுமுறைத் தொழிற் சங்க நடவடிக்கை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
வௌிநாட்டுச் செய்திகள் 
  • பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெரிவாகியுள் ளார்.  
  • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் ஆகியோருக்கு இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 
  • 2024 ஆம் ஆண்டில் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. 
விளையாட்டுச் செய்தி 
  • மறுசீரமைக்கப்பட்ட கிரிக்கெட் யாப்பு யோசனையை விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சமர்ப்பித் துள்ளார்.