Breaking News

வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த அப்ரிடி.!

லண்டன், லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் மரகத பச்சை நிற அங்கிகளும் கடும் பச்சை நிற அங்கிகளும் காட்சி கொடுத்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹின் ஷா அவ்ரிடி அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தினார்.

பங்களாதேஷை 94 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இப் போட்டியில் 6 விக் கெட்களைக் கைப்பற்றிய ஷஹீன் ஷா அப்ரிடி, உலகக் கிண்ண வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த சாதனைக்கு உரியவரானார்.

இப் போட்டியல் மாபெரும் சாதனை மிகு வெற்றியீட்டினால் மாத்திரமே அரை இறுதிக்குச் செல்ல முடியும் என்பதை அறிந்திருந்த பாகிஸ்தான அது எட்டாக் கனி என்பதை முன்னரே அறிந்துகொண்டது. அதிசயம் நிகழ்த்துவது எளி தல்ல.

ஆனால் ஐந்தாம் இடத்தை அடைந்தமை மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகின்றது என போட்டி முடிவில் பாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹ்மத் தெரிவித்துள்ளாா்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 315 ஓட்டங்களைப் பெற்றது. இமாம் உல் ஹக் 100 ஓட்டங்களையும் பாபர் அஸாம் 96 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷ் 44 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 221 ஓட்டங் களைப் பெற்றது. எவ்வாறாயினும் பாகிஸ்தானின் ஷஹின் ஷா அப்ரிடி இப் போட்டியில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்து உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தவர் என்ற சாதனையை நிலைநாட்டினார்.

இப் போட்டியில் 9.1 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இவர் வீழ்த்தினார். உலகக் கிண்ண வரலாற்றில் அதி சிறந்த பந்துவீச்சுப் பெறும தியைப் பதிவுசெய்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமைக்கும் இடதுகை வேகப் பந்து வீச்சாளரான ஷஹீன் ஷா அவ்றிடி சொந்தக்காரரானார்.

அதுமட்டுமல்லாமல் இவ் வருட உலகக் கிண்ணப் போட்டிகளில் அதி சிறந்த பந்துவீச்சுப் பெறுதியையும் ஷஹின் ஷா அப்ரிடி பதிவு செய்தார. பங்களா தேஷின் முன்வரிசை வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த அப்ரிடி, 5ஆவது விக்கெட்டாக மொஹமத் சய்புதீனை ஆட்டமிழக்கச் செய்தபோத உலகக் கிண்ணப் போட்டிகளில் மிகக் குறைந்த வயதில் (19 வருடங்கள், 90 நாட்கள்) 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த சாதனைக்கு சொந்தக்காரரானார்.

முஸ்தாபிஸுர் ரஹ்மானின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் பாகிஸ்தான் சார் பாக உலகக் கிண்ணத்தில் 6 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது வீரரானார்.