Breaking News

தேர்­தலின் பின்­னரும் ஐ.தே.க.வே ஆட்­சி­ய­மைக்கும் - மனோ­க­ணேசன்

தேர்­தல்­களின் பின்னர் புதிய அர­சாங்கம் ஒன்று உரு­வாகும். அதனால் வேறொரு அர­சாங்கம் ஆட்­சி­ய­மைக்கப் போவ­தாகத் தவ­றாகப் புரிந்­து­கொள்ளக்கூடாது.

தேர்­தலின் பின்னர் புதி­தாக ஆட்­சி­ய­மைக்கும் அர­சாங்­கமும் நாங்­க­ளாகத் தான் இருப்போம். இந்த ஆட்­சியில் குறை­பா­டுகள் இருந்­தன. ஆனால் 2015 ஆம் ஆண்­டுக்கு முன்னர் காணப்­பட்ட அர­சாங்­கத்தை விடவும் எமது அர­சாங்கம் பல­ ம­டங்கு சிறந்­த­தாகும் என்று தேசிய ஒரு­மைப்­ப­பாடு, அர­ச­க­ரும மொழி கள், சமூக மேம்­பாடு மற்றும் இந்­து­ச­மய அலு­வல்கள் அமைச்சர் மனோ­க­ணேசன் தெரி­வித்துள்ளாா். 

அருண் பிரசாத் அறக்­கட்­ட­ளையின் தலைவர் எம்.மாணிக்­க­வா­ச­கத்­தினால் அருண் மாணிக்­க­வா­சகம் இந்து தேசிய பாட­சா­லைக்­கான காணி கல்வி அமைச்­சிடம் கைய­ளிக்­கப்­ப­டு­தலும் தேசிய ஒரு­மைப்­பாடு, அர­ச­ க­ரும மொழி கள், சமூக மேம்­பாடு மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்­சினால் அப்­பா­ட­சா­லைக்கு வழங்­கப்­படும் புதிய கட்­ட­டத்­திற்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நேற்று வெள்­ளிக்­கி­ழமை அருண் அருண் மாணிக்­க­வா­சகம் இந்து தேசிய பாட­சாலை வளா­கத்தில் நடை­பெற்­றது.

இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது: வத்­தளை பிர­தே­சத்தில் தமிழ் பாட­சாலை ஒன்றை நிறு­வு­வது சுமார் 10 வரு­டங்­க­ளுக்கும் அதி­க­மான காலக்­க­னவு என்றே கூற­வேண்டும். அது இன்று (நேற்று) நன­வா­கி­யி­ருக்­கி­றது.

பல­வ­ருட கால­மாக கொழும்பில் தமிழ் பாட­சாலை ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்ட போதிலும் கூட இன, மத, அர­சியல் கார­ணங்­க­ளினால் அது சாத்­தி­ய­மற்றுப் போனது.

எனினும் இப்­போது மாணிக்­க­வா­ச­கத்தின் பங்­க­ளிப்பின் மூலம் அது நிறை­வே­றி­யி­ருக்­கி­றது. சட்­டத்தை வளைத்து அல்­லது உடைத்து என்­றாலும் நல்ல காரி­யங்­களைச் செய்ய வேண்டும் என்­பதே என்­னு­டைய விருப்பம். இப்­பா­ட­சா­லைக்­கான அனு­ம­தியைக் கோரிய போது, புதி­தாக அமைக்­கப்­படும் பாட­சா­லைகள் தனி­யொரு இனத்­தையோ, மதத்­தையோ அல்­லது மொழி­யையோ சார்ந்­தாக இருக்க முடி­யாது என்று எனக்குச் சட்­டத்தைப் போதித்­தார்கள்.

ஆனால் சகோ­த­ர­மொழிப் பாட­சா­லைகள் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் போது இந்தச் சட்டம் செயற்­ப­டு­வ­தில்­லையே என்று நான் அவர்­க­ளிடம் கேட்டேன். எனவே இந்தக் காணியில் இந்து தமிழ் பாட­சாலை தான் அமைக்க முடியும் என்றும் கூறினேன்.

இறு­தி­யாக தமிழ் பாட­சாலை அமைப்­ப­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டு­விட்­டது. எனவே சட்­டத்தை வளைக்க வேண்­டிய இடத்தில் வளைத்து, அமைச்­ச­ர­வையில் சிரிக்க வேண்­டிய இடத்தில் சிரித்து, முறைக்க வேண்­டிய இடத்தில் முறைத்து எமக்கு வேண்­டிய நல்ல காரி­யங்­களைச் செய்­து­கொண்­டி­ருக்­கிறோம்.

அதே­போன்று களுத்­துறை மாவட்­டத்தின் மத்­து­கம பிர­தே­சத்­திலும் ஐந்து ஏக்கர் நிலத்தில் தமிழ் பாட­சாலை ஒன்று விரைவில் அமைக்­கப்­படும். ஆரம்­பத்தில் எனது அமைச்சு குறித்து சிலர் கிண்டல் செய்­தார்கள், சிரித்­தார்கள். ஆனால் அவற்றை நான் பொருட்­ப­டுத்­த­வில்லை.

இன்­ற­ளவில் அனைத்து மாவட்­டங்­க­ளிலும் பல்­வேறு அபி­வி­ருத்­தி­க­ளுக்கும் பல மில்­லியன் ரூபாவை வழங்­கக்­கூ­டிய நிலைக்கு எனது அமைச்சைக் கொண்­டு­வந்­தி­ருக்­கிறேன். ஒரு பாட­சா­லையை அமைப்­ப­தென்­பது நூறு கோவில்கள், நூறு பள்­ளி­வா­சல்கள், நூறு விகா­ரைகள், நூறு தேவா­ல­யங்­களை அமைப்­ப­தற்குச் சம­னாகும்.

எதிர்­வரும் தேர்­தல்­களின் பின்னர் புதிய அர­சாங்கம் ஒன்று உரு­வாகும். அத னால் வேறொரு அரசாங்கம் ஆட்சியமைக்கப் போவதாகத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. தேர்தலின் பின்னர் புதிதாக ஆட்சியமைக்கும் அரசாங்க மும் நாங்களாகத் தான் இருப்போம்.

இந்த ஆட்சியில் குறைபாடுகள் இருந்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டுக்கு முன் னர் காணப்பட்ட அரசாங்கத்தை விடவும் எமது அரசாங்கம் பலமடங்கு சிறந்த தாகும்.