புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதன் பிரேரணை தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று
புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப் பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில், இன்று (25) ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது.
சபை அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

2016ஆம் ஆண்டிலேயே புதிய அரசிய லமைப்பைத் தயாரிப்பது குறித்த நட வடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந் தன.
அத்துடன், மக்களின் கருத்திற் கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
மக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் அரசியலமைப்புச் சபையிடம் அரசியலமைப்பு சட்டமூலம் தொடர்பான அறிக்கையை, நடவடிக்கைக் குழு 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தது.
எனினும், இதுவரை குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாமதம் நில வுகின்ற நிலையிலேயே இன்றைய தினம் விவாதங்கள் ஆரம்பமாகவுள்ளன.