செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு.!
உள்நாட்டுச் செய்திகள்
- போதைப்பொருளுக்கு எதிராக போராடுவதால் தமக்கு மரண அச்சுறுத்தல் நிலவுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
- நாட்டிற்கு பாதகமான உடன் படிக்கைகளுக்கு இணக்கம் தெரி விக்கப் போவதில்லை என ஐக் கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேம தாச தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் இராணுவ முகாமை நிறுவும் திட்டமோ எதிர்பார்ப்போ இல்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கூறி யுள்ளார்.
- ”இலட்சிய வரம் – ஆற்றல்களின் சந்ததிக்கான மகுடம்” புலமைப்பரிசில் செயற்றிட்டப் பயணம் ஆரம்பமானது.
- மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத் தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனுவை பரிசீலனை செய்வதற்கு ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப் பட்டுள்ளது.
- மொழிக் கொள்கை தொடர்பில், அதிகாரிகள் சிலர் பொறுப்பின்றி செயற் படுவதாக, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
- ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்திய நிலையில், ஊழியர்கள் பகிஷ்கரிப்பை முன்னெடுத்தமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய சுந்தர, நாரஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் குற்றப் புல னாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டுச் செய்தி
- ஈரான் நெருப்புடன் விளையாடுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
- எட்டு மாதங்களில் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது கூட பந்து வீச வில்லை என்றாலும் தனது அனுபவத்தைக் கொண்டு பந்துவீசியதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஏஞ்சலோ மெத்தியூஸ் கூறியுள்ளார்.
- உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றியீட் டியுள்ளது.