கடற்பிராந்தியங்களை பாதுகாக்க சர்வதேச இராணுவக் கூட்டமைப்பு அவசியம் – அமெரிக்கா
ஈரான் மற்றும் யேமனை அண்மித்த கடற்பிராந்தியங்களைப் பாதுகாப்பதற் காக சர்வதேச இராணுவக் கூட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வர்த்தக நோக்குடன், சர்வதேச கப்பல் கள் பயணிக்கும் கடல் மார்க்கத்தி லுள்ள மத்திய கிழக்கு வலயத்தின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகுமென அமெரிக்கக் கடற் படை சுட்டிக் காட்டியுள்ளது.
கடந்த மாதம், மசகு எண்ணெயுடன் பயணித்த இரண்டு கப்பல்கள் மீது நடத் தப்பட்ட தாக்குதல்களுடன் ஈரானுக்கு தொடர்புள்ளதாக அமெரிக்கா இதற்கு முன்னர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.
இந்நிலையில், தமது புதிய திட்டம் குறித்து அமெரிக்க அரசு பல்வேறு நாடுக ளுடன் பேச்சுவார்த்தை நடாத்திவருவதாக, அமெரிக்கக் கடற்படையின் சிரேஷ்ட ஜெனரல் ஜோசப் டேன்போர்ட் (Gen. Joseph Dunford) தெரிவித்துள்ளார்.