உயர்தர பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.!
2019ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற் றும் தனியார் பரீட்சார்த்திகள், நாளை (24) முதல் பரீட்சைகள் திணைக் களத் தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த நாட்களில் தபால் ஊழியர் களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற் சங்க நடவடிக்கை காரணமாக அனு மதி அட்டைகளை வழங்குவதில் தாம தம் ஏற்பட்டுள்ளதால் இச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து பரீட்சார்த்திகள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பதிவு செய்து பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளலாமென பரீட்சைகள் ஆணையா ளர் நாயகம் தெரிவித்துள்ளார்.