Breaking News

சுதந்திரக் கிண்ணத் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை வழங்குவதில் நிதி மோசடி (காணொளி)

சுதந்திரக் கிண்ணத் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை வழங்குவதில் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக, தகவல்களின் மூலம் உறுதியாகியுள்ளது. அதற் கான ஆவணங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஒளி பரப்பு உரிமை தொடர்பாக வாய்மூலப் பதிலை எதிர்பார்த்து விளையாட்டுத் துறை அமைச்சரான ஹரீன் பெர் னாண்டோவுக்கு சில கேள்விகளை, முன்னாள் அமைச்சரான மஹிந் தானந்த அளுத்கமகே அனுப்பியிருந்தார்.

இதனைக் கேட்க வேண்டியது என்னிடமல்ல. இருந்தாலும் நான் பதிலளிக்கி றேன். அதனை திலங்க சுமதிபாலவிடம் கேளுங்கள். அவர் உங்களுடைய பக் கம் இருக்கிறார் என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


அந்தக் கேள்விகளில் 2018ஆம் ஆண்டு சுதந்திரக் கிண்ணக் கிரிக்கெட் தொட ருக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தைத் தவிர்த்து அப் போட்டித் தொட ரின் ஒளிபரப்பு உரிமை அல்லது அனுசரணை கொடுப்பனவு என்பன மூன்றாம் தரப்பினரூடாக மேற்கொள்ளப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? என வினாவப்பட்டுள்ளது.

அப்படியானால் அவர்களுக்கு கிடைத்த தரகுப்பணம் எவ்வளவு? இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு கிடைக்க வேண்டிய பணத்தை மூன்றாம் தரப்பி னரிடம் வழங்க அனுமதி அளித்தது யார்? என கேட்கப்பட்டுள்ளது.

 குறித்த கேள்விக் கடிதத்துக்கு பதிலளித்து இலங்கை கிரிக்கெட் செயலாளரின் கையொப்பத்துடன் ஏப்ரல் முதலாம் திகதி பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சுதந்திரக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான ஒளிபரப்பு உரிமை அல்லது அனுசரணை கொடுப்பனவு மூன்றாம் தரப்பினர் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.

என்பதை தமது நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை என இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தைக்கு சென்று மேலும் பலனளிக்கக்கூடிய கூடுதல் தொகைக்கு ஒளிபரப்பு உரிமையை விற்பனை செய்வதற்காக சர்வதேச விற்பனை ஆலோ சக நிறுவனமான லஹாடியா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் சேவையைப் பெற்றுக்கொண்டதாக அந்த பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகல ஒளிபரப்பு உரிமைகளுக்காகவும் பணக் கொடுக்கல் – வாங்கல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கும் அனுசரணையாளர்களுக்கும் இடையில் நேரடி யாக இடம்பெற்றுள்ளதென அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அதேபோன்று தமது நிறுவனத்தால் லஹாடியா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 35 910 அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அந்தப் பணம் 2018 மே 17ஆம் திகதி குறித்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிடப்பட்டமை இந்த ஆவணத்தின் ஊடாக தெளிவாகின்றது. அந்தப் பணம் தரகுப் பணம் என்பதை இந்த ஆவணங்கள் உறுதியளிக்கின்றன.

எனினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி 3 இலட்சத்து 9 ஆயிரத்து 25 அமெரிக்க டொலர்கள் நிதி லஹாடியா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு சுதந்திரக் கிண்ணத்துக்கான தரகுப் பணமாக வழங்கப்பட்டுள்ளது.

இப் பணம் வழங்கப்பட்ட முறைமை அல்லது வழங்கப்பட்டதற்கான காரணம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளரின் கடிதத்தில் குறிப் பிடப்படாமல் இருப்பது எதனால்?

அதற்கமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் தற்போதைய விளையாட் டுத்துறை அமைச்சர் மற்றும் பாராளுமன்றத்துக்கு வழங்கிய தகவல்கள் முன் னுக்குப்பின் முரணாக இருப்பது சந்தேகத்தை தோற்றுவிக்கும் காரணியா கும்.

ஓராண்டுக்குப் பின்னர் குறித்த கொடுப்பனவு தொடர்பாக பாராளுமன்றத்தில் வினவப்பட்ட போது இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தவறான தகவல்களை வழங்கியதா?

உண்மையான கொடுக்கல் வாங்கலை விளையாட்டுத்துறை அமைச்சர் மற் றும் பாராளுமன்றத்திடம் மறைப்பதற்காகவா இலங்கை கிரிக்கெட் செயலா ளர் இவ்வாறு தெளிவற்ற பதிலை வழங்கினார்?

ஒளிபரப்பு உரிமைக்கான பணம் வெளிநாட்டு வங்கிக்கணக்கில் வைப்பிலிடப் பட்டது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குழப்பத்தை ஏற்படுத்தி யமை மற்றொரு நிதி மோசடியை மறைப்பதற்காகவா?

இக் கேள்விகளைப் போன்றே இதற்கு முன்னர் தென்னாபிரிக்க கிரிக்கெட் விஜ யத்துக்காக இலங்கைக்கு கிடைக்கவேண்டிய ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 84 அமெரிக்க டொலர் நிதி மற்றும் வெளிநாட்டு வங்கிக் கணக்கில் வைப்பிலிட முயற்சிக்கப்பட்ட 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பாக எடுக்கப்பட்ட வழிமுறைகள் இன்றும் நாட்டுக்கு புரியாத புதிராகவே உள்ளன.