Breaking News

பிரபாகரனின் பலத்திற்கு பின்னால் போதைப்பொருள் என்கிறாா் - மைத்திரி

இலங்கையின் உள்விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியம், உள்ளிட்ட சர்வ தேச சமூகம் தலையிடுவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயல் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி வித்துள்ளார்.

மரண தண்டனையினை அமுல்படுத் தினால் ஜி. எஸ்.பி வரிச்சலுகை உள் ளிட்ட சர்வதேச சலுகைகள் இரத்து செய்யப்படும் என்று ஐரோப்பிய ஒன் றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் குறிப்பிடுவது எமது நாட்டின் சுயா தீனத் தன்மைக்கு விடுக்கும் அச் சுறுத்தல்களாகவே காணப்படும்.

மரண தண்டனையினை நிறைவேற்றுவதாக தீர்மானித்தமை நாட்டு மக்களின் தனிப்பட்ட நலன்களை மையப்படுததியே தவிர எவ்வித அரசியல் நோக்கங் களுக்கும் அல்ல என்பதை சர்வதேச அமைப்புக்கள் புரிந்துக் கொள்ள வேண் டும். தேசிய சுயாதீனத்தன்மைக்கு சர்வதேச சமூகங்கள் தலையிடுவதை ஏற் றுக்கொள்ள முடியாது.

மரண தண்டனை விடயத்தில் சர்வதேசத்தில் மட்டுமல்ல உள்ளுர் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பினை தெரிவிப்பது பொருத்தமற்றதாகும். போதைப்பொருள் வியாபாரமே எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு நாட்டை அழிக்கும் சக்தி போதைப்பொருள் வியாபாரத்தில் உண்டு.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போதைப்பொருள் கடத் தல்காரர்களுடன் நேரடி தொடர்பு கொண்டு இருந்தமையின் ஊடாகவே ஆயு தங்களை பெற்றுக் கொண்டு 30 வருட கால சிவில் யுத்தத்தை முன்னெடுத்து சென்றார்.

போதைப்பொருளில் இருந்து விடுப்பட்ட நாடு என்ற தொனிப்பொருளினை முன்னிலைப்படுத்தி கடந்த மாதம் 23ம் திகதி தொடக்கம் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுத்த தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார செய்திட்டத்தின் இறுதி தின நிகழ்வு இன்று சுஹததாச உள்ளக விளையாட்டரங்களில் ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.