Breaking News

பத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல்.!

சிங்களப் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் உப்பாலி தென்­னக்கோன் மற் றும் அவ­ரது மனைவி மீது தாக்­குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் முன் னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி லலித் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2009 ஜன­வரி 23 ஆம் திகதி உப் பாலி தென்­னக்கோன் மற்றும் அவ­ரது மனைவி மீது அடை­யாளம் தெரி­யா­தோரால் கம்­பஹா பகு­தியில் தாக்­கு தல் நடத்­தப்­பட்­டது. எனினும் அது குறித்து பல வரு­ட­கா­ல­மாக சரி­யான விசா­ர­ணைகள் இடம்­பெ­றாத நிலை யில், 2015 ஆம் ஆண்டு இதன் விசா­ர­ணைகள், குற்றப் புல­னாய்வுப் பிரிவின் மற்றுமொரு பிரிவுக்கு குறித்த விசா­ரணை பாரப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்நிலையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ரணை­களில், தாக்­குதல் சம்­ப­வ­மா­னது மரு­தானை திரிப்­போலி இரா­ணுவப் புல­னாய்வு முகாம் வீரர்­களின் செயல் என்­பது தொடர்பில் சாட்­சிகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு சிலர் கைதாகியுள்ளனா்.

 மேஜர் புளத்­வத்த உள்­ளிட்ட அந்த குழு­வி­னரே, 2008 ஆம் ஆண்டு த நேஷன் பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் கீத் நொயார், ஊட­க­வி­ய­லாளர் நாமல் பெரேரா ஆகியோர் மீதான தாக்­கு­தல்­க­ளு­டனும் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக தெரி­வித்து சி.ஐ.டி.யினர் அவர்­களை கைது­செய்து நீதி­மன்­றங்­களில் முன்­னி­லைப்­ப­டுத்­தினர்.

எனினும் உப்பாலி தென்­ன­க்கோனின் காரில் இருந்து பெறப்­பட்ட கைவிரல் ரேகையை மையப்­ப­டுத்தி, திரி­ப்போலி முகாமின் லலித் ராஜ­பக்ஷ எனும் இரா­ணுவ புலனாய்வு அதிகாரியை கைதுசெய்­வது தொடர்பில் சி.ஐ.டி.யினர் சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னையைக் கோரியிருந்ததுடன், அதற்­கான அனு­மதி நேற்றைய தினம் வழங்கப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி லலித் ராஜபக்ஷ இன்று காலை ஹங்வெல்ல பகுதியில் வைத்து கைதாகியுள்ளாா்.