ஜனாதிபதி மைத்திரி தற்பொழுது சலனபுத்தியோடு செயற்படுவதாக - மாவை
-விடுதலைப்புலிகள் கொள்கைக்காகப் போராடினார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏப்ரல் 21தாக்குதலுக்குப்பின்னர் கூறினார். அதே ஜனாதிபதி தற்போதுவிடுதலைப் புலிகள் போதைவஸ்துக்காரர்களுடன் தொடர்புபட்டிருந்ததாக கூறுவது அவர் சலனபுத்தியோடு இருக்கிறார் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
இது கண்டிக்கத்தக்கது என்று தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் தொடர்பில் ஜனாதி பதி தெரிவித்த கருத்து குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
மேலும் தெரிவிக்கையில்,
நம்பி வாக்களித்த மக்களுக்கு அரசியல் தவறுகளை இழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரோகம் செய்து வருகின் றார் தமிழீழ விடுதலைப் புலிகள் போதைப் பொருள் வியாபாரம் நடத்தி இனவிடுதலைப் போராட்டம் நடத்தினார்கள் என்று ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதை நாங்கள் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அவ்வாறு அந்த இயக்கம் தொடர்பில் கருத்துச் சொல்வதற்கு எந்தவிதமான அடிப்படையோ அல்லது ஆதா ரமோ இல்லாமல் அவர் ஒரு சலன புத்தி யோடு அப்படியான வார்த்தைகளை பாவித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற் கொலைக் குண்டுத் தாக்குதல் நாட்டில் நடைபெற்றதற்குப் பின்னர் ஜனாதிபதி தான் விடுதலைப் புலிகள் ஒரு கொள்கைக்காகப் போராடினார்கள் என்றும் அதனால் தான் மக்கள் அவர்களை ஆதரித்தார்கள் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் அப்படி நினைத்து அதைச் சொன்னவர் இனப்பிரச்சனைத் தீர்விற்காக ஒரு அடிகூட முன்னேற விடவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட நாட்டிலுள்ள முக்கியமான பல பிரச்சினைகளுக்கான தீர்விற்காக நாட்டிலுள்ள 68 இலட்சம் மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தும் கூட ஜனாதிபதி பெரும் துரோகம் செய்திருக்கின்றார்.
இப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண தடுத்துவருவதுடன் சகலதையும் குழப்பி வருகின்றார். உண்மைக்கு மாறான அந்தக் கருத்துக் களை நாங்கள் எதிர்த்து நிற்கின்றோம். ஆகவே உண்மைக்கு மாறான இவ்வாறான சலன புத்தியோடு கருத்துக்களை வெளியிடாமல் இருப்பதே ஜனாதிபதி பதவிக்கு ஒரு சிறப்பு என்கிறாா்.