Breaking News

புதிய அர­சி­ய­ல­மைப்பு வருமா வராதா? ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­வதாக கூட்­ட­மைப்பு

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொடர்­பி­லான அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது குறித்த இரண்டு நாட்கள் சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் அடுத்த வாரம் பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்­டு­வ­ர­வுள்ளார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த நீண்ட கால பேச்­சுக்கள் இடம்­பெற்று வரும் நிலை­யிலும், வழி நடத்தல் குழுவில் புதிய அர­சியல் அமைப்பு முயற்­சிகள் இடை நடுவே ஸ்தம்­பித்­துள்ள நிலை­யிலும் இது குறித்து உட­ன­டி­யாக அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வலி­யு­றுத்­தியே தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை இரண்டு நாட்கள் சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை ஒன்­றினை கொண்­டு­வ­ர­வுள்ளார்.

எதிர்­வரும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள் இந்த விவாதம் நடை பெற­வுள்­ளது. எதிர்­வரும் 23ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்ற அமர்­வுகள் கூட­வுள்ள நிலையில், அந்த வாரத்­தி­லேயே மரண தண்­ட­னையை நீக்கும் தனி நபர் பிரே­ரணை குறித்த விவா­தமும் நடை­பெ­ற­வுள்­ளதுடன் 24 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவும் கூடவுள்ள தாகத் தெரிவித்துள்ளாா்.