Breaking News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; பிரதமர் சாட்சியமளிப்பார், வாக்குமூலத்திற்காக ஜனாதிபதியை நாடும் தெரிவுக்குழு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளு மன் றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரி வுக்குழு முன்னிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆஜராகி சட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் அன்றைய தினத்தில் பாது காப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரையும் தெரிவுக் குழு முன்னிலையில் ஆஜராகி சாட் சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக தெரி வுக்குழுவினர் ஜனாதிபதியையும் நாடவுள்ளனர். பாராளுமன்ற தெரிவுக்குழு வின் அடுத்த அமர்வு நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இதன்போது பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கபில வைத்தி யரத்னவும் சாட்சியமளிக்கவுள்ளார். இந்நிலையில், இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக தெரிவுக்குழு மீண் டும் அவரை அழைக்கவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை பாரா ளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி பாராளு மன் றத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் 10 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து ஆதராங்களையும் பதிவு செய்ய பாராளுமன்ற தெரிவுக்குழு தீர்மானித்துள் ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.