மக்களின் காணிகள் மக்களுக்கே கிடைக்க வேண்டும் - வடமாகாண ஆளுநர்
மக்களின் காணிகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் நாளை பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ள அதேவேளை மேலும் 100 ஏக்கர் வரையான காணிவிடுவிக்கப்படவுள்ளது என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சியில் தெரிவித்துள்ளாா்.
கிளிநொச்சியில் நடைபெற்ற கலந்து ரையாடல் ஒன்றில் பின்னர் ஊடக வியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
கிளி நொச்சி மாவட்ட விவசாயிகளுட னான விசேட கலந்துரையாடல் நேற் றைய தினம் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் வட்டக்கச்சி விவசாய பண்ணையில் இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டதாக ஆளுநர் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளாா்.
இதன்போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவினர், உண்மையில் பல ஏக்கர் காணிகள் விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இன்று வெள்ளிக்கிளமை 20 ஏக்கருக்கு அதிகமான காணி விடுவிக்கப்படவுள்ளது.
இவை அனைத்தையும் தனித்தனியாகவே செய்ய முடிகின்றது. இதற்கு அரசி யல்வாதிகளின் ஒத்துழைப்பு கிடைத்திருக்கவில்லை. அவர்கள் வெறுமனே காணிகள் விடுவிக்கப்படவில்லை என்ற கருத்துக்களை மாத்திரமே முன் வைத்து வருகின்றனர்.
மக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும். அதேபோன்று அரச திணைக்களங்களின் காணிகளும் உரிய முறைப்படி பயன்பாட்டிற்காக விடு விக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன். பூநகரியில் உள்ள கயூ தோட்ட காணி பயன்பாடு தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.
அதனை கூட்டுறவு முறையிலான பயன்பாட்டிற்காக பகிர்ந்தளிக்க திட்டமிடப் பட்டுள்ளது. அந்த காணியும் விடுவிக்கப்பட்டு அவ்வாறான பயன்பாட்டிற்காக கையளிக்கப்படுமெனத் தெரிவித்துள்ளாா்.