Breaking News

தோட்டத் தொழிலாளர்களின் கொடுப்பனவு விடயத்தில் மஹிந்த அதிரடி.!

தோட்டத்தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளையும் தனியார் துறையின ருக்கான சம்பளத்தையும் உயர்த்த அரசாங்கம் உடனடியாக தலையிட வேண் டும்.

தோட்டத்தொழிலாளர்களின் வாக்கு களைப் பெற்றுக் கொண்டு அவர்களை கவனத்தில் கொள்ளாத தலைமைகள் இன்று அரசாங்கத்தில் உள்ளன என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் நேற்று சபையில் தெரிவித்துள்ளாா்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக் கிழமை நிலையியல்கட்டளை 27/2 இ கீழ் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இந்த காரணிகளை முன்வைத் துள்ளாா்.

 மேலும் உரையாற்றுகையில்,

இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பகுதி அளவிலான அரச நிறுவனங்களுக்கு இன்றுவரை சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.

இதனை பக்கசார்பான செயற்பாடு என்றே கருதுகின்றோம். ஏன் அவர்களின் சம்பள உயர்வை முன்னெடுக்கவில்லை என அரசாங்கம் சபையில் தெளிவு படுத்த வேண்டும்.

தனியார் துறைக்கு சம்பள உயர்வுகளை ஏற்படுத்த எமது அரசாங்கத்தில் பேச்சு வார்த்தை நடத்தி நாம் தனியார் துறையின் சம்பளத்தை உயர்த்தினோம். இந்த அரசாங்கம் தனியார் துறையின் சம்பள விடயங்களில் எந்த தலையீடும் செய் யாமல் இருக்கின்றமை பாரதூரமான விடயமாகும்.

தனியார் துறையினருக்கான சம்பளத்தை உயர்த்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கரை ஆண்டுகளாக அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளது.

அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துவதாக கூறிய இந்த அர சாங்கம் இறுதிவரை அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. எனினும் இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்ற தோட்டத்தொழிலாளர்களின் வாக்கு களை தன்வசப்படுத்திய போதும் கூட அவர்களுக்கான எந்த நன்மைகளையும் செய்யவில்லை.

இந்த அரசாங்கத்தில் தோட்டத்தொழிலாளர்களின் தலைமைகள் அங்கம் வகி த்து வருகின்றனர் என்பதும் கவலைக்கிடமான விடயமாகவே உள்ளது. எந்த வித அக்கறையும் இல்லாது இந்த மலையக தலைமைகள் இந்த அரசாங் கத்தை காப்பாற்ற மட்டுமே நடவடிக்கை எடுக்கறது வருகின்றன.

ஆகவே தனியார் மற்றும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்து  கின்றேன் எனத் தெரிவித்துள்ளாா்.