Breaking News

இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா படை அனுப்பும் - மைக் பாம்பியோ

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு இந்தியாவுக்கு ஆதரவாகப் படைகளை அனுப் புவதற்கு அமெரிக்கா ஆலோ சித்து வருவதாக மைக் பாம்பியோ கூறியுள்ளார். 

இந்தியா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் வகையில் தனது உலகளாவிய படை பலத்தை அதிகரிப்பது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ மேலும் தெரி வித்தார். 

ஆசியப் பிராந்தியத்தில் சீனா வின் அச்சுறுத்தல்கள், அத்துமீ றல்களைக் கட்டுப்படுத்தவும், சீனாவால் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நாடுகளுக்கு ஆதர வாகவும் படைகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா கூறியிருந்த நிலையில், இந்தியாவுக்குச் சிறப்புரிமை அளித்துப் படைகளை அனுப்பு வது குறித்து ஆலோசித்து வரு வதாக மைக் பாம்பியோ தெரி வித்துள்ளார். 

"பிரசல்ஸ் 2020 மன்றம்' நிகழ்ச்சியில் உரையாற் றும்போதே பாம்பியோ மேற் கண்டவாறு தெரிவித்தார்.