Breaking News

உலகளவில் கொரோனா வைரஸினால் 9.5 மில்லியன் மக்கள் பாதிப்பு !

உலகில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ள பெண்களை விட ஆண்களே அதிகளவில் உயிரிழப்பதாக ஆய்வொன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 
ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார பிரிவு மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
 
இத்தாலி, சீனா ஆகிய நாடுகளில் பெண்களை விட ஆண்களே கொவிட் 19 தொற்றால் அதிகளவு பீடிக்கப்படுவதுடன் அவர்களின் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருவதாக அந்த ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் இது முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது.

குறித்த நாடுகளில் கொரோனா வைரசால் ஆண்கள் அதிகளவு பீடிக்கப்பட்டுள்ள போதிலும் பெண்களின் மரண விகிதம் அதிகரித்து காணப்படுவதாக அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி வரையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளவர்களில் 3.3 வீதமான பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் 2.9 வீதமான ஆண்களும் பலியாகியுள்ளனர்.
 
இந்தியாவில் இதுவரை கொவிட் 19 தொற்றால் 4 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 ஆயிரத்து 703 பேர் பலியாகியுள்ளனர்.

அதேநேரம் உலகலாவியல ரீதியில் கொவிட் 19 தொற்றால் இதுவரை 90 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 லட்சத்து 70 ஆயிரத்து 821 பேர் பலியாகியுள்ளனர்.

எவ்வாறெனினும் சர்வதேச ரீதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த 48 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.