வாக்களிப்பதற்கான புதிய நேர மாற்ற அறிவிப்பு!
2020 ஆம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான கால எல்லையை ஒரு மணி நேரத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் வாக்களிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லையை காலை 7 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை வரையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.