Breaking News

வவுனியாவில் ஒன்றரை வயது குழந்தையை காவு கொண்டது இயற்க்கை!

வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆயிலடி பகுதியில் வேப்பமரம் முறிந்து விழுந்ததில், ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

பலத்த காற்றினால் வீதிக்கரையில் இருந்த வேப்பமரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த குழந்தை மற்றும் இரு சிறுமிகள் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எனினும் காயமடைந்திருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

சம்பவத்தில் ஆயிலடி பகுதியை சேர்ந்த மதுசன் லக்சாயினி என்ற ஒன்றரை வயது குழந்தையே மரணமடைந்துள்ளதுடன், ஜீவிதா (10), சர்மிலாதேவி (8) ஆகிய சிறுமிகள் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் இன்றையதினம் மதியம் அனைத்து பகுதிகளிலும் பலத்த காற்று வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது