அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்றில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகித்து வருகிறது. அங்கு இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மும்பை நானாவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை அடுத்து அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கு மேற்கொண்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது..
இது தொடர்பாக பதிவிட்டுள்ள ட்விட்டில் அவர் கூறி இருப்பதாவது.
"நான் கொரோனா பாசிட்டிவ்.. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளேன்.. மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்..
குடும்பத்தினர் மற்றும் மற்ற பணியாளர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இன்னும் அதன் முடிவுகள் வரவில்லை. கடந்த 10 நாட்களில் என்னை சந்தித்தவர்கள் மற்றும் அருகில் வந்தவர்கள் தயவு செய்து கொரோனா சோதனை செய்து கொள்ளுங்கள்" என அமிதாப் பச்சன் கூறி உள்ளார்.
முன்பே அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் அவரது உடல்நிலை பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்த நிலையில் தான் அமிதாப் தனக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதியாக அறிவித்துள்ளார்.
அமிதாப் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரபலங்கள் அவருக்கு ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
T 3590 -I have tested CoviD positive .. shifted to Hospital .. hospital informing authorities .. family and staff undergone tests , results awaited ..
— Amitabh Bachchan (@SrBachchan) July 11, 2020
All that have been in close proximity to me in the last 10 days are requested to please get themselves tested !