ஜப்பானிடமிருந்து இருந்து இலங்கைக்கு ரூ.1360 மில்லியன் மானியம்!
இலங்கையின் சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்கும், கோவிட் -19யின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாட்டை மேம்படுத்தவும் நாட்டின் அன்றாட நடவடிக்கைகளை இயல்பாக்குவதற்கும் ஜப்பான் இலங்கைக்கு 1360 மில்லியன் ரூபாய் மானியம் வழங்கவுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், இலங்கையில் கோவிட் -19 பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த ஜப்பானிய உதவித் திட்ட மூலம் (எம்.ஆர்.ஐ) ஸ்கேனர், சி.டி ஸ்கேனர், பெட் சைட் எக்ஸ்-ரே சிஸ்டம்ஸ், சென்ட்ரல் மானிட்டர்கள், பெட்சைட் மானிட்டர்கள் மற்றும் டிஃபிபிரிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று ஜப்பானிய அரசாங்கம் 800 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் ரூ. 1,360 மில்லியன்) உதவி வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
குறித்த ஒப்பந்தம் இன்று (2020 ஜூலை 08) நிதி,பொருளாதார மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சகத்தில் இலங்கை அரசு சார்பாக நிதி, பொருளாதார மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சின் செயலாளரால் கையெழுத்திடப்பட்டது.அத்துடன் ஜப்பான் சார்பாக இலங்கைக்கான ஜப்பானின் தூதர் திரு. சுகியாமா அகிரா, திரு. அட்டிகல்லே ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்.