Breaking News

கொரோன நெருக்கடியிலும் பார்வையவற்றவருக்கு விழியாக மாறிய பெண்.. வைரலாகும் வீடியோ!

கொரோனா வழக்கத்தையே மாற்றியுள்ளது. நண்பர்கள், உறவினர்களிடம் கூட குறிப்பிட்ட இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய சூழல் உள்ளது. அறிமுகம் இல்லாதவர்கள் அருகே செல்லவே அஞ்சுகிறோம். இந்த சூழலில் கேரளாவில் பஸ்சில் ஏற முடியாமல் தவித்த பார்வையற்ற முதியவர் ஒருவரின் கரம் பிடித்து அழைத்துச் சென்று பேருந்தில் ஏற்றிவிட்ட பெண்ணின் செயலுக்கு பாராட்டு குவிந்துள்ளது. 

உதவி செய்த பெண்ணின் பெயர் சுப்ரியா. திருவல்லாவில் உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் இவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த செவ்வாய்க் கிழமையன்று சுப்ரியா, வழக்கம் போல வேலை முடிந்து சுப்ரியா வீடு திரும்பிக்கொண்டிருந்தார் அப்போது, கண் பார்வையற்ற முதியவர் ஒருவர், பேருந்து ஏற முடியாமல் தவித்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த சுப்ரியா, 'முதியவரிடம் எங்கே செல்ல வேண்டும்' என்று கேட்டார். பத்தனம்திட்டாவில் உள்ள மஞ்சடிக்கு செல்ல வேண்டும் என்று அந்த முதியவர் பதிலளித்தார்.

தொடர்ந்து, முதியவரை பேருந்து நிலையம் நோக்கி சுப்ரியா அழைத்து வந்து கொண்டிருந்த போது, திருவல்லா பஸ் சாலையில் நிற்பதை பார்த்ததும், ஓடி போய் முதலில் கண்டக்டரிடத்தில் சுப்பிரா தகவலை சொன்னர். பின்னர், மீண்டும் ஓடி சென்று முதியவரின் கையைப் பிடித்து அழைத்துவந்து பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார். 

இந்த காட்சியை வீட்டின் மொட்டை மாடியிலிருந்து வீடியோவாக பதிவு செய்த ஜோஷ்வா என்பவர் சுப்ரியாவின் மனிதாபிமான செயலை சமூகவலைத் தளத்தில் பதிவிட அது வைரலானது. எந்த எதிர்பார்ப்புமில்லாமல் ஏதேச்சையாக உதவி செய்த சுப்ரியாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.