Breaking News

தபால் மூல வாக்காளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இதன்போது வாக்களிக்கத் தவறியவர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, எதிர்வரும் 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

குறித்த தினங்களில் தனது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தமது தபால் மூல வாக்களிப்பை செலுத்த முடியும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, 24 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரையும் 25 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.