Breaking News

வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயம்!

2020 பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமானது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அனுமதிப் பத்திரம், சிரேஷ்ட பிரஜைகளுக்கான அடையாள அட்டை, ஆட்பதிவுத் திணைக்களம் விநியோகித்த மத குருமாருக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதோ ஒன்றை சமர்ப்பிப்பது கட்டாயமானது. பாராளுமன்றத் தேர்தலுக்காக ஆட்பதிவுத் திணைக்களம் விநியோகித்த தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்திற்கான உறுதிப்படுத்தல் பத்திரமும் ஏற்றுக் கொள்ளப்படும்.

இவற்றில் எதுவும் இல்லை என்றால், கிராம உத்தியோகத்தர் அல்லது தோட்ட நிர்வாகியை சந்தித்து தேர்தல் ஆணைக்குழு வழங்கும் தற்காலிக அடையாள அட்டையை பெறவும் முடியும். இதற்காக சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட இரு புகைப்படங்களின் பிரதியை எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் கிராம உத்தியோகத்தரிடமோ, தோட்ட நிர்வாகியிடமோ ஒப்படைக்க வேண்டும்