Breaking News

லெபனானில் பாரிய வெடிப்புச் சம்பவம் - பலர் பலி!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த இரண்டு பெரிய வெடிப்புச் சம்பவங்களில் 78 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 4,000 பேர் படுகாயமடைந்தனர்.

பெய்ரூட் நகரின் கிடங்கு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த Ammonium nitrate வெடிபொருள் வெடித்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் உள்ள இதர கட்டடங்களும் பெரிய அளவில் சேதமடைந்துள்ளன.

பெய்ரூட்டிலிருந்து சுமார் 240 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சைப்ரஸ் (Cyprus) தீவு வரை வெடிப்புச் சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆறு ஆண்டுகளாக 2,750 டன் Ammonium nitrate, கிடங்கு ஒன்றில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்ததை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று லெபனான் ஜனாதிபதி மிஷெல் எயுவன் (Michel Aoun) கூறினார்.

லெபனானில் நாளைய தினத்தைத் துக்கம் அனுசரிக்கும் நாளாக அவர் அறிவித்தார்.

லெபனான் பிரதமர் ஹசான் டியப் (Hassan Diab), வெடிப்புச் சம்பவத்தை ஒரு பேரிடர் என்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொன்னார்.

கிடங்கில் இருந்த Ammonium nitrate எப்படி வெடித்தது என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.