Breaking News

வாக்காளர் அட்டைகளை பெறாதவர்களுக்கான விஷேட அறிவித்தல்!

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெறாத வாக்காளர்கள்  நாளை (05) தபால் அலுவலங்களில் அவற்றை பெற்றுக் கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.


தங்களுடைய பிரதேச தபால் அலுவலகத்திற்கு சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் என பிரதி தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் வாக்காளர் அட்டை இல்லாவிடினும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தங்களது அடையாளத்தை உறுதி செய்ததன் பின்னர் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.