மட்டக்களப்பில் 22 வயது இளைஞனின் உயிரை காவுகொண்ட கோர விபத்து! (படங்கள்)
மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியின் மாவடிவேம்பு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பயணித்த இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் காவற்துறை குறிப்பிட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மாவடிவேம்பு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஏறாவூர் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













