Breaking News

ஜனாதிபதியின் விசேட அறிவுறுத்தல்!

வாரந்தோரும் வரும் புதன் கிழமைகளை பொது மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் தினமாக மாற்றுவதுடன், அதற்காக அனைத்து அமைச்சர்கள் மற்றும் அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 

அத்துடன், தேசிய வர்த்தகக் கொள்கையை வகுக்க நிபுணர் குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் முன்வைக்கப்பட்ட இலங்கையில் இயற்கை எரிவாயு தொடர்பான தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.