Breaking News

14 ஆவது கொரோனா மரணம் பதிவானது!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

50 வயதுடைய குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றாரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.