Breaking News

பஸ் ரயிலுடன் மோதிய கோர விபத்தில் 18 பேர் பலி.(படங்கள் இணைப்பு)

தாய்லாந்தில் பஸ் ரயிலுடன் மோதிய கோர விபத்தில் 18 பேர் பலி. 

தாய்லாந்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 65 சுற்றுலா பயணிகளுடன் பயணித்த பஸ்ஸொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கின் கிழக்கே 80 கிலோ மீட்டர் (50 மைல்) தொலைவில் அமைந்துள்ள ச்ச்சேவ்ங்ஸோ (Chacheongsao) பகுதியிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. ரயில் கடவையை பஸ் கடக்கும்போது துரதிர்ஷ்டவசமாக ரயிலுடன் மோதியுள்ளது. 

இதன்போது 18 பேர் உயிரிழந்ததுடன், 40 பேர் காயமடைந்ததாக மாவட்ட தலைமை அதிகாரியான பிரதுயெங் யூகாசெம் உறுதிப்படுத்தியுள்ளார். 

காயடைந்த அனைவரும் இரண்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து நடந்தபோது மழை பெய்து கொண்டிருந்தமையினால் பஸ்ஸின் சாரதி ரயில் வருவதை அவதானிக்கவில்லை என்றும் ஆரம்ப கட்ட தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.