Breaking News

கட்டுநாயக்க விமான நிலைய பணியாளர் ஒருவருக்கு கொரோனா!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திதை சுத்தம் செய்யும் பிரிவில் கடையாற்றி வந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 

சிலாபம் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய குறித்த பெண் நோய் நிலமை காரணமாக நேற்று (06) நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 

குறித்த பரிசோதனை முடிவின் அடிப்படையில் குறித்த பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

குறித்த பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

அத்துடன் குறித்த பெண்ணுடன் தொடர்புடையவர்கள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கபடுகின்றது.