Breaking News

சென்னை அணி தோல்வி; தோனி மகளுக்கு மிரட்டல்!

ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி தொடர் தோல்வி கண்டு வருவதால், கேப்டன் தோனியின் மகளுக்கு சோசியல் மீடியாவில் மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணி ஐ.பி.எல் தொடரில் கடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் 10 ரன்களில் தோல்வி கண்டது. இதனால் , பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் பின்னடைவு ஏற்படுள்ளது. 

கொல்கத்தா அணியிடம் தோல்வி கண்டதையடுத்து, தோனியின் மனைவி ஷாக்ஷியின் இன்ஸ்டாகிராமில் பல மிரட்டல் கமாண்டுகள் பதிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக தோனியின் மகள் 5 வயது ஷிவா குறித்து மோசமான பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது, அந்த பதிவுகளின் ஸ்கிரீன் ஷாட்டுகள் ட்விட்டரில் பரவி வருகிறது. 

சென்னை அணியின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இது போன்ற பதிவுகளுக்கு கடும் கண்டனம் வலுத்து வருகிறது தோனி மட்டுமல்ல கிரிக்கெட்டில் களத்தில் யாராவது மோசமாக விளையாடினால், அவர்களின் குடும்பத்துக்கு மிரட்டல் விடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் பல முறை இது போன்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.