Breaking News

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய செய்தி!

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கடந்த காலத்தைபோல் சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம். அதற்கு மக்களும் ஒத்துழைக்கவேண்டும் என ஜனாதிபதி கேட்டுள்ளார். 

இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் கூறியுள்ளதாவது,  

COVID-19 அச்சுறுத்தல் உலகெங்கும் பரவிக்கொண்டிருந்த வேலையில், ஒரு பலமான தேசமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதனை தோற்கடித்து வெற்றிகண்டோம்.  

தற்போது , COVID-19 மீண்டும் நம் நாட்டிற்குள் வந்துள்ளது. முன்னரை போலவே, எமது சுகாதார, பாதுகாப்பு மற்றும் பிற சேவை துறைகளை சேர்ந்தவர்கள் இந்த அச்சுறுத்தலில் இருந்து நம்மைப்பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.  

இந்த சவாலான சூழ்நிலையில், சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதோடு, பல்வேறுபட்ட பொய்ப்பிரச்சார குழுக்களால் பரப்பப்படும் தவறான பிரச்சாரத்திற்கு ஏமாறாமல், உத்தியோகபூர்வ அரசாங்க தகவல் சேவைகளிலிருந்து தேவையான தகவல்களைப் பெற்று அதன்படி செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.