Breaking News

உங்கள் குருதியின் வகை என்ன? உங்களுக்கு கொரோன பதிப்பு குறைவா/அதிகமா இதோ!


O வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் A,B அல்லது AB வகை குருதியை கொண்டவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கு 62 % வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

இது தவிர, O வகை குருதியை கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றினை எதிர்க்கும் சக்தி அதிக அளவில் உள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.  

கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை கண்டறிந்து அதனை பிரயோகிக்கும் போது மரபணு மற்றும் பல்வேறு இன மக்களின் தனித்துவம் என்பனவும் கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதேவேளை, செயல்திறனை கொண்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியினை பிரயோகிக்கும் காலத்தில், அவை ஆரம்பத்தில் சிறார்களுக்கு வழங்கப்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவினால் வெளியிடப்பட்ட தகவலுக்கு அமைய இந்த வருட இறுதியில் மட்டுப்படுத்தப்பட்ட வகையிலான தடுப்பூசிகள் பாவனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அளவு படிப்படியாக அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் லண்டன் 'டெய்லி மெயிலில்' தெரிவிக்கப்பட்டுள்ளது.