Breaking News

இராணுவத் தளபதியிடமிருந்து மக்களுக்கான விஷேட அறிவிப்பு!

சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாத மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றிய ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 0113456548 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதன் நிமித்தம் எதிர்வரும் 07 நாட்கள் சவாலான நாட்கள் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 07 நாட்களுக்கு பொது மக்கள் மிக அவாதனமாக செயற்பட வேண்டும் என்பதுடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

ஆகையால், எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.