Breaking News

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கல்வியமைச்சின் விஷேட செய்தி!

இந்த ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமை பரீசில் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் தங்களது தகவல்களை கல்வி அமைச்சின் இணைய பக்கத்தில் உள்ளிடுமாறு கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய பரீட்சார்த்திகள் தங்களது தரவுகளை www.info.moe.gov.lk என்ற இணைய பக்கத்தில் பதிவிட முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இணையம் ஊடாக தகவல்களை வழங்க முடியாத பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ள மத்திய நிலையத்தில் தங்களது தகவல்களை வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட்-19 தொற்று பரவும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமைய இவ்வாறு தகவல்கள் சேகரிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.