ஜோடி போட்டு ரியோவை ரவுண்டு கட்டிய சனம்-அனிதா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக அர்ச்சனா குருப்பை சக போட்டியாளர்கள் ரவுண்டு கட்டி தாக்கி வருகின்றனர். பாலாஜி ஆரம்பித்து வைத்த இந்த ரவுண்டில் சிக்கிய அர்ச்சனா குருப்பில் உள்ளவர்கள் தாங்கள் குரூப் இல்லை என்று சொல்ல ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்றைய கால் சென்டர் டாஸ்க்கில் ரியோ மற்றும் ஆஜித் இடையே நடந்த உரையாடலில், அனிதா-சனம் ஆகியோர்களின் நட்பை ஒரு உதாரணமாக கூறியதை சனமும், அனிதாவும் பிடித்துகொண்டு ரியோவை ரவுண்டு கட்டி வருகின்றனர்.
இந்த வீட்டில் மற்றவர்கள் நட்புடன் பழகியது தெரியவில்லையா? நாங்க ரெண்டு பழகியதை மட்டும் ஏன் குறிப்பிட்டு காட்டுகிறீர்கள்’ என்று வெளுத்து வாங்க, வழக்கம்போல் ரியோ சரண்டர் ஆகிறார்.
அனிதா, சனம் ஆகிய இருவரும் வாயை திறந்தால் மூடும் பழக்கம் அவர்களிடம் இல்லை.
இந்த நிலையில் இருவரிடமும் ஒரே நேரத்தில் ரியோ மாட்டிக்கொள்ள அவரை காப்பாற்ற அவரது குரூப்பின் தலைவி கூட வரவில்லை என்பதுதான் இன்றைய பரிதாபமான நிலை.
#Day53 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/yGbXWl3ecW
— Vijay Television (@vijaytelevision) November 26, 2020