Breaking News

பாலாஜி-ஷிவானி வேற லெவல் ரொமான்ஸ்: 'மாஸ்டர்' பாடல் பின்னணியுடன் அசத்தல்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாகவே பாலாஜி-ஷிவானி ரொமான்ஸ் காட்சிகளை ஆங்காங்கே காண முடிகிறது. ஒரு மணி நேர நிகழ்ச்சியில் முக்கால் மணி நேரம் சண்டை சச்சரவு இருந்து வரும் நிலையில் இந்த ரொமான்ஸ் காட்சிகள் தான் பார்வையாளர்களுக்கு ஆறுதலாக உள்ளது. 

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் பாலாஜி-ரொமான்ஸ் காட்சிகள் வேற லெவலில் உள்ளது. ஷிவானியை கண்ணாலேயே பாலாஜி அழைப்பதென்னா, ஷிவானியின் காந்தப்பார்வையென்ன, பாலாஜிக்கு ஊட்டி விடுவதும், தலையை அமுக்கிவிடுவதும் என்ன? வேற லெவல் ரொமான்ஸ் என்றே தெரிகிறது. 

மேலும் இந்த ரொமான்ஸ் காட்சிகளின் பின்னணியில் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘அந்த கண்ணு பாத்தாக்க’ என்ற பாடல் ஒலிப்பதும் ரசிக்கும் வகையில் உள்ளது. இந்த நிலையில் திடீரென ஆஜித், கேப்ரில்லாவிடம் பாலாஜி-ஷிவானி ரொமான்ஸை குறுக்கிட்டு கெடுக்கிறேன் என்று கூறி இருவரின் அருகே உட்கார்ந்து ஒரு நல்ல காதலுக்கு வில்லனாவதோடு இந்த புரமோ முடிவடைந்துள்ளது.