உச்ச நீதிமன்றம் செல்வேன் - டொனல்ட் டரம்ப் அறிவிப்பு!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தாமே வெற்றிப்பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதற்கு எதிராக தாம் உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் உரையாற்றிய போதே அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்த்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,..
வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இக்கட்டான சூழ்நிலையிலும் நடப்பு அரசாங்கத்திற்கு துணை நின்ற அனைவருக்கும் மீண்டும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை கொண்டாட தயாராகி வருகின்றோம். "இந்த அளவுக்கு இதுபோன்ற எண்ணிக்கையில் வாக்காளர்கள் வந்து வாக்குரிமையை பயன்படுத்தியதில்லை. ஜோர்ஜியா மாநிலத்தில் நாங்கள் வென்றிருக்கிறோம்.
இது மிக முக்கியமானது. பென்சில்வேனியாவில் நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். இதுவும் முக்கியமானது. டெக்சாஸில் முடிவுகள் இறுதியாகாவிட்டாலும் அங்கும் நாங்கள் வெற்றி பெறுவோம். மிஷிகனில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்.
இந்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்ததற்காக அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறினார்.
"ஃபுளோரிடா, டெக்சாஸ், வடக்கு கரோலைனா என பல இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றோம்.
ஆனால், இந்த முடிவுகளை எல்லாம் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் நீதிமன்றத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்கள். அவர்கள் மோசடியை செய்கிறார்கள். இதைத்தான் ஆரம்பத்திலேயே நாங்கள் கூறி வந்தோம். வெற்றி முடிவுகள் சாதகமாக வந்து கொண்டிருந்த வேளையில் திடீரென அனைத்தையும் நிறுத்த முற்படுகிறார்கள்."
எனவே, நாங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு செல்லப்போகிறோம். என்னைப் பொருத்தவரை, நான் ஏற்கனவு வென்று விட்டேன். எனக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் டொனல்ட் டரம்ப் இதன்போது சுட்டிக்காட்டினார்.