Breaking News

கற்றல் செயற்பாடுகள் எவ்வாறு தீர்மானிக்கப்படும் - கல்வி அமைச்சர் விளக்கம்!

சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே மூன்றாம் தவணைக்காக பாடசாலை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பை கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ளார். பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக இரண்டு விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

அந்தவகையில் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் சுகாதார பாதுகாப்பு என்பன தொடர்பிலே அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த விடயங்களை கருத்திற் கொண்டு சுகாதார தரப்பின் விஷேட நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன. 

அதற்கமையவே பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள முடியும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.