Breaking News

தண்ணீருக்கடியில் தேனிலவு கொண்டாடும் காஜல் அகர்வால்: வெளியான புகைப்படங்கள்!


பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும், தற்போது அவர் மாலத்தீவில் கணவருடன் தேனிலவு கொண்டாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே. 

காஜல் அகர்வாலின் தேனிலவு புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு அவை ஏராளமான ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

இந்த நிலையில் தற்போது அவர் தண்ணீருக்கு அடியில் இருக்கும் அறை ஒன்றில் கணவருடன் ஹனிமூன் கொண்டாடும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். தண்ணீருக்கு அடியில் இருக்கும் அறையில் இருப்பது முற்றிலும் புதுமையான அனுபவமாக இருப்பதாகவும், அறையை சுற்றிலும் கடல் நீர் மற்றும் விதவிதமான மீன்களுடன் இருக்கும் அனுபவமே வித்தியாசமானது என்றும் காஜல் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ சிரஞ்சீவியுடன் ’ஆச்சார்யா’ மற்றும் வெங்கட் பிரபு இயக்கி வரும் ’லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப்தொடர் ஆகியவற்றில் நடித்து வருகிறார் என்பதும், தேனிலவு முடிந்து அவர் நாடு திரும்பியதும் இந்த படங்களின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.