லண்டனில் தாயை கொலை செய்த மகன் கைது!
லண்டனில் தனது சொந்த தாயையே கொலை செய்த இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷனில் படேல் மேற்கு லண்டனில் உள்ள கிரீன்ஃபோர்டு பகுதியில் வசித்து வருகிறார்.
இவருக்கு வயது 31. இவரத்ய் தயார்
ஹன்சா படேல் (வயது 62) அவர்கள் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு நவம்பர் 25ஆம் தேதியன்று ஷனில் படேல் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து லண்டன் போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிரீன்ஃபோர்டு பகுதியில் உள்ள ட்ரீவ் கார்டன்ஸில் நவம்பர் 25ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பவத்தில் பலத்த காயங்களுடன் பெண் உயிரிழந்துள்ளர்” என்று தெரிவித்துள்ளது.
கொலை தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் போலீசாரை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ஹன்சா படேலின் மகன் ஷனில் படேலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் இன்று விம்பிள்டன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
ஹன்சா படேல் மிகவும் சாதுவான பெண் எனவும், அவர் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததாகவும், விரைவில் பணி ஓய்வு பெற இருப்பதாகவும் அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். மேலும், அவர் திடீரென கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.